Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஜனவரி 05 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, இரண்டு மலைப்பாம்புகளுக்கு திருமணம் நடத்தி வைத்த சம்பவம் கம்போடியாவில் நடைபெற்றுள்ளது.
சம்ரியுன் எனப் பெயரிடப்பட்ட 'மணமகளான' மலைப்பாம்பு 16 அடி நீளமும் 200 இறாத்தல் எடையையும் கொண்டது.
அப்பாம்புக்கும் அதைவிட சிறிய தோற்றம் கொண்ட 'மணமகன்' பாம்புக்கும் இடையில், தலைநகர் பினொம் பென் தெற்கு, கண்டால் மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் திருமணம் நடைபெற்றது.
பௌத்த பிக்குகள் அந்த திருமண ஜோடியை ஆசிர்வதித்தனர். கிராமத்தவர்கள் மலர்கள் தூவி வாழ்த்தினர். 2 மணித்தியாலங்களாக இப் பாம்புகளுக்கான திருமணத்தை அவர்கள் நடத்தியுள்ளனர். இவ்வாறு செய்வதனால் அவர்களது கிராமத்திற்கு அமைதியும் அபிவிருத்தியும் ஏற்படுமென நம்புகின்றனர்.
'எங்களது கிராமத்திற்கு தீயவை நீக்கப்பட்டு, நல்ல அதிஷ்டமும் சந்தோசமும் கிடைப்பதற்காக இந்த திருமணத்தை நாங்கள் ஒழுங்கு செய்தோம்' என 41 வயதுடைய நெத் வீ என்பவர் தெரிவித்துள்ளார். இவரே அப்பாம்புகளின் உரிமையாளர் ஆவார்.
'இவ்விரு பாம்புகளும் கணவன் மனைவியாக உள்ளன. அவை இணைந்து வாழ வேண்டும், இல்லாவிட்டால் நாங்கள் தீய சம்பவங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டிருக்கும் என எம்மிடம் கூறப்பட்டது' எனவும் நெத் வீ தெரிவித்துள்ளார்.
மேற்படி பெண் மலைப்பாம்பு 1994 ஆம் ஆண்டு சிறிய குட்டியாக பிடிக்கப்பட்டதாகவும் அதன்பின் தமது குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டதாகவும் நெத் வீ கூறுகிறார்.
மணமகனான ஆண் மலைப்பாம்பின் பெயர் கிரோங் பிச். அந்த பாம்பு 12 நாட்களுக்கு முன்னர் அருகிலுள்ள கிராமமொன்றிலிருந்து பிடிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
24 minute ago
1 hours ago