Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஜனவரி 31 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியைச் சேர்ந்த பெண் பல் மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக ' லோ கட்' உடைகளை அணிந்து பணியாற்றும் உத்தியை கையாள்கிறார்.
பல்மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வரும் ஆண் நோயாளர்கள் டேர்ன்டில் எனும் இந்த பாரம்பரிய ஆடைகளை பார்த்து மகிழ்வதை அவதானித்த பின்புதான் மூனிச் நகரில் பணியாற்றும் டாக்டரி மேரி கத்தரின் கிளார்கோவ்ஸ்கிக்கு இந்த எண்ணம் தோன்றியதாம்.
எனவே தனக்கும் தனது 10 ஊழியர்களுக்கும் தாழ்ந்த வெட்டு கொண்ட ஒரே மாதிரியான ஆடைகளை வாங்கியுள்ளார்.
41 வயதான டாக்டர் மேரி கத்தரின் இது குறித்து தெரிவிக்கையில் 'இங்கு முக்கிய விடயம் என்னவெனில் எங்களுக்கு நோயாளிகளின் பயத்தை முதலில் விலகச் செய்ய வேண்டும். 'பிளவுகள்' நோயாளிகளை 'மயகத்திற்குள்ளாக்கி' அவர் எதிர்நோக்கும் வலியை விலகச் செய்துவிடும் எனக் கூறியுள்ளார்.
'சில நோயாளர்கள் இங்கு நுழையும் போதே வாயை திறந்துவிடுவார்கள். பல்மருத்துவர்களுக்கு அதுதானே மிகவும் தேவையானது' என்கிறார் டாக்டர் கத்தரின்.
இத்திட்டத்தை அமுல்படுத்தியபின் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அங்கு பணியாற்றும் லாரிஷா என்பவர் இது தொடர்பாக கூறுகையில், டேர்ன்டில் ஆடைகளை அணிந்து பணியாற்றுவது எனக்கு மிக விருப்பமானது. அந்த ஆடையில் நான் அழகாகத் தோன்றுகிறேன். இந்த ஆடைகளை எமக்கு கிடைத்தபின் இங்கு பணியாற்றுவது வேடிக்கையாகவும் சுவாரஷ்யமாகவும் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
xxx Tuesday, 01 February 2011 03:16 AM
ரெம்ப நல்ல பிசினஸ்
Reply : 0 0
xlntgson Tuesday, 01 February 2011 09:34 PM
பல்வலி தேவலை, அதைப் பார்க்கப் போய் 'பெண்களையே பார்த்ததில்லையா', என்று கேட்க ஏற்படும் மன வலியை விட !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
34 minute ago
36 minute ago
2 hours ago