Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2011 மே 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் வீட்டின் சமையலறையில் முதலையொன்றை வளர்த்துவந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இலினோய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதான யார்பரோஹ் எனும் இந்நபர், அயலவர்கள் கொடுத்த தகவலையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அபாயகரமான முதலையை வீட்டில் வைத்திருந்தமைக்கு இவர் கூறிய காரணம் விசித்திரமானது. இளம் பெண்கள் அம்முதலையை விரும்புவதாலேயே அம்முதலையை யார்பரோஹ் வளர்த்தாராம்
4 அடி நீளமான இந்த முதலையை மீன்தொட்டியில் அவர் வளர்த்து வந்தார். பொதுவாக அந்த வகை முதலை 14 அடி வரை வளரும். ஆனால் ஏன் அது சிறியதா இருக்கிறது என பொலிஸார் கேட்டபோது மாதத்திற்கு ஒரு தடவையே அதற்கு தான் உணவளிப்பதாக யார்பரோஹ் கூறியுள்ளார்.
ஆபாயகரமான விலங்கை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் யார்பரோஹ் மீது வழக்குத் தொடரப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago