2025 மே 15, வியாழக்கிழமை

குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்

Kogilavani   / 2011 மே 20 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பதின்மர் வயதான தாயொருவர் தனது 4 மாதங்களே ஆன குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை பராமரிப்பதற்கு கடினம் என்ற நிலையில் தமது   சுதந்திரமான பழைய வாழ்க்கைக்கு திரும்பிச் செல்வதற்காக அப்பெண் தனது குழந்தையை இவ்வாறு கொன்றதாக கூறப்படுகிறது. 

வைத்தியசாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வீடியோ கமெராவில் குறித்த பெண் தனது குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 வயதான இப்பெண் 4 மாத வயதுடைய தனது ஆண் குழந்தையின் மீது போர்வையொன்றை  போர்த்தும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. சில நிமிடங்களின் பின் அவர் குழந்தையின் முகத்தில் கைகளை வைத்து அழுத்தி அதன் மூச்சை நிறுத்துவதும் பதிவாகியுள்ளது.

ரேமன்ட் என்ற குழந்தையே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது.

தனது குழந்தையை கொன்ற இப்பெண் தனது மகன் சுவாசிக்காமல் இருப்பதாக வைத்தியசாலை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டாதாக அறிவித்தனர்

அப்பெண் தனது குழந்தையை கொலை செய்தமைக்கான ஆதாரமாக மேற்படி வீடியோ ஒளிப்பதிவுக் காட்சி டெக்ஸாஸ் மாநில நீதிமன்றமொன்றில்  காண்பிக்கப்பட்டது.

அக்காட்சிகளை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இக்குழந்தை சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக கூறி அதை மேற்படி பெண் வைத்தியசாலையில் முதலில் அனுமதித்தாராம்.  அக்குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து அக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பினர். ஆனால் இரு நாட்களின் பின்னர் மீண்டும் குழந்தை சுவாசிக்க மறுப்பதாக கூறி அக்குழந்தையை அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளார்.

இது குறித்து சந்தேகம் கொண்ட வைத்தியசாலை ஊழியர்கள் அக்குழந்தை இருந்த அறையில் கமெரா ஒன்றை ஒளித்துவைத்து கண்காணித்தனர். அதன் மூலம் மேற்படி கொலை அம்பலமாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • pasu Saturday, 21 May 2011 01:23 AM

    வையத்தில் வாழ்வதற்கு இவளுக்கென்ன தகுதியுண்டு?

    Reply : 0       0

    ruthra Saturday, 21 May 2011 01:24 AM

    தாய்மையின் புனிதத்திற்கு களங்கம் விளைவித்தவர்களாலேயே இந்த உலகம் அழியபோகிறது....

    Reply : 0       0

    மனிதன் Saturday, 21 May 2011 08:10 PM

    இவளும் ஒரே பெண்ணா

    Reply : 0       0

    Ibrahim Nihrir Saturday, 21 May 2011 10:04 PM

    குழந்தையை கொன்ற அதே பாணியில் இவளும் தண்டிக்கப்பட வேண்டும்.

    Reply : 0       0

    tm.imran Monday, 23 May 2011 05:01 PM

    இவள் தாயா பே ..............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .