Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மே 31 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாக கூறப்படும் ஆணின் ஆணுறுப்பை பெண்ணொருவர் கத்தியால் வெட்டித் துண்டித்துள்ளதுடன் அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அந்த நபருக்கெதிராக முறைப்பாடு செய்த சம்பவம் பங்களாதேஷில் நடைபெற்றுள்ளது.
மொஞ்சு பேகம் எனும் 40 வயதான பெண்ணே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். மொஹெம்மெல் ஹக் மெஸி என்ற நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாகவும் அதற்கு பயந்து தான் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் பொலிஸாரிடம் அப் பெண் தெரிவித்துள்ளார்.
அப்பெண் குறித்த நபரின் ஆணுறுப்பை பொலித்தின் பையிலிட்டு எடுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அந்நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து வருகின்றார்.
தலைநகர் டாக்காவிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மீர்ஸாபூர் எனும் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்மனிதர் வீட்டினுள்ளே நுழைந்து அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாக பொலிஸ் உயரதிகாரியான அப்துல் காயெர் கூறியுள்ளார்.
3 பிள்ளைகளின் தாயான அப்பெண்ணுடன் தனக்கு காதல் தொடர்பு இருந்தாகவும் ஆனால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து வாழ தான் மறுத்ததால் அப்பெண் தன்னை இவ்வாறு தாக்கியதாகவும் மெஸி தெரிவித்தார். ஏற்கெனவே திருமணமான இவர் 5 பிள்ளைகளின் தந்தையாவார்.
'தன்னை திருமணம் செய்துகொண்டு டாக்கா நகரில் வசிக்க வருமாறு அவர் கோரினார். நான் எனது மனைவி பிள்ளைகளை விட்டுச் செல்ல முடியாது என அப்பெண்ணிடம் கூறினேன். அதனால் அவர் என் மீது வஞ்சம் தீர்த்துக்கொண்டார்' என மெஸி கூறியுள்ளார்.
மேற்படி நபர் குணமடைந்தவுடன் கைது செய்யப்படுவார் என பொலிஸ் அதிகாரி அப்துல் காயெர் கூறியுள்ளார்.
ruthra Wednesday, 01 June 2011 03:33 PM
சபாஷ்... நல்லதொரு அடி
Reply : 0 0
ruthra Wednesday, 01 June 2011 03:36 PM
ஒவ்வொரு பெண்ணும் துணிந்து இதைத்போன்ற செயற்பாடுகளில் ஈடுப்பட்டால் வெறி நாய்க் கூட்டம் பெண்களை திரும்பியேனும் பார்க்காது. இதைப்போன்ற ஒரு பெண் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால் பாலியல் துஷ்பிரயோகம் என்ற சொல்லிற்கு இந்த உலகில் இடமில்லை.
Reply : 0 0
Saleem Ramees Wednesday, 01 June 2011 04:24 PM
பெண்ணா இவள், ஆண்கள் மிகவும் கவனம் ! பெண்களிடம் சேட்டை வைக்க வேண்டாம். இதே
கதிதான் உங்களுக்கும்!! சோ, இப்படியான வெறி பிடித்தவர்கைளையும் ஆண்கள் காதலிப்பது கவனம் (காதலிக்க வேண்டாம்) OK.
Reply : 0 0
jaliyuath Wednesday, 01 June 2011 06:50 PM
உண்மையில் பெங்காளி பெண்கள் இப்படி செய்வார்கள் என்று நம்ப முடியவில்லை , ஏன் என்றால் அவர்களது ஆண்களும் சவுதி தம்மம் நகரில் மனிதனையே வெட்டி கரி சமைத்தார்கள்.
Reply : 0 0
rasmi Wednesday, 01 June 2011 09:20 PM
ஆண்கள் என்றால் வெட்டிவிடலாம் பெண்கள் செய்தல் என்ன செய்வது ருத்ரா .....
Reply : 0 0
ruthra Wednesday, 01 June 2011 11:46 PM
@rusmi,
பெண்களால் ஆண்கள் பலவந்தமாக இழுத்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறன. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதை ஆண்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் நூற்றிற்கு 0.1 வீதம் மட்டுமே அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. ஆண்டாண்டு காலம் ஆண்களால் பெண்கள் வல்லுறவுக்குட்பட்ட சம்பவங்கள் மட்டும் வரலாற்றில் அதிகமாய் பதிவாகியுள்ளன. இவ்வாற காம வெறியர்கள் நீதிமன்றத்தில் ஏற்றப்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிவந்து சுதந்திரமாக நடமாடுகின்றனர். இந்தச் சமூகம் ஆண்களுக்கு கொடுத்துள்ள இடம் இதுதான்.
வரலாற்றைப் புரட்டிப்போடும் வகையில் ஒரு பெண் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் உடனே உங்களைப் போன்ற ஆண்கள் போர் கொடி தூக்குவது ஏன்? நியாயத்திற்கு கட்டுப்பட்டு வார்த்தைகளை வெளியிடுங்கள். வேலியே பயிரை மேயும் இந்தக் காலத்தில் இதுதான் சரி என்பது போல இருக்கிறது உங்களது வாதம்.
Reply : 0 0
xlntgson Friday, 03 June 2011 08:58 PM
rusmi, நானும் உங்களோடு!
ஓமோம், கற்பழிப்பு கிடக்கட்டும்!
பெண்கள் ஆண்களை பழித்தால் தண்டனை இல்லை; பெண்களை ஆண்கள் பழித்தால் eve teasing போன்ற வழக்குகள்!
பாட்டுப் பாடினால் கூட முறைப்பதும் பைத்தியம் என்பதும்- உண்மையில் பையன்கள் நிலைமை மோசம் தான்!
எனக்கு சற்றே வயதானாலும் இன்னும் நான் ஒரு பையன்தானே! ஹி ஹி
peccadillo என்பது தான் என்ன, பெண்கள் வேறு உலகத்தில் இருந்தா வந்திருக்கின்றனர்?
ஆணையும் பெண்ணையும் பிரிப்பது கொடுமையான சட்டங்களே, தும்மக்கூடாது என்று மூக்கையும் வாயையும் சேர்த்துப் பிடிப்பது சரியா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago