Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 07 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலையரங்கொன்றில் நடந்த நாடகமொன்றில் நடிக நடிகையர் திடீரென ஆடைகளை களைந்துவிட்டு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு அதிர்ச்சியளித்த சம்பவம் குறித்த செய்தியை தமிழ் மிரர் விநோத உலகம் பகுதியில் அண்மையில் வாசித்திருப்பீர்கள். ஆனால் பிரிட்டனில் நடந்த சம்பவமொன்று அதைவிட அதிர்ச்சி அளிக்கக்கூடியது.
லண்டனிலுள்ள சால்டர் வெல்ஸ் எனும் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நடனக்கலைஞர்கள் ஆடைகளை கலைந்துவிட்டு முழு நிர்வாணமாக தோன்றியமை மட்டுமல்லாது , அவர்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு வந்து பார்வையாளர்கள் மீதும் பாய்ந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஊன் பியூ டீ டென்டரஸ் போர்டல் டீ மேர்ட்' என அழைக்கப்படும் இந்நிகழ்ச்சியில் தோன்றிய ஆண் நடனக்கலைஞர்களே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும் எண்ணிக்கையான ஆண், பெண்கள் நிறைந்திருந்த பார்வையாளர் வரிசைகள் மீது தாவிக் குதித்தோடிய 'இக்கலைஞர்கள்' பார்வையாளர்களின் மத்தியில் நின்றுகொண்டு வேடிக்கை காட்டினர்.
அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து சிலர் சிரித்தாலும் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கலைத்துவ அதிர்ச்சிக்கும் அதிர்ச்சிகரமான கலைக்கும் இடைவெளி உள்ளது என ஒருவர் இதனை விமர்சித்துள்ளார்.
Hot water Wednesday, 08 June 2011 08:59 PM
கலையின் பேரில் ஆசைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்
Reply : 0 0
3roses Thursday, 09 June 2011 12:42 AM
எங்கே செல்லும் இந்த உலகம் யார்தான் யார்தான் அறிவாரோ.....?
Reply : 0 0
RIYAS Thursday, 09 June 2011 04:09 PM
உலக அழிவின் அறிகுறி .தயாராகுங்கள் !
Reply : 0 0
jaliyuath Thursday, 09 June 2011 07:35 PM
இவர்கள் மனிதர்களா ? சந்தேகம் மிருக பண்பு பிடித்தவர்கள் இவர்கள்.
Reply : 0 0
xlntgson 0776994341;0716597735 sms only Thursday, 09 June 2011 08:54 PM
பார்வையாளர்களை திருப்திப் படுத்த இது ஒரு நவீன யுக்தியோ?
Reply : 0 0
khan Friday, 10 June 2011 06:12 AM
இவர்கள் மனோ ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு சிகிச்சை .சைக்கோலொஜிகல் ட்ரீட்மென்ட் கொடுத்தல் சரி என நான் நினைக்கிறேன். நீங்கள்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago