Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 01 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கத்தின் விலை ஏறி, இறங்கிக்கொண்டிருக்கும் நிலையில், பலரும் தங்கம், தங்க நகைகள் வாங்கும் கனவை நனவாக்குவதில் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்த வரிசையில் மத்திய பிரதேசம் இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரியம் சரஸ்வத் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
யூ டியூபர் பிரியம் வெளியிட்ட வீடியோவின் தொடக்கத்தில் வீட்டின் போர்டிகோ காண்பிக்கப்படுகிறது. அந்த போர்டிகோவில் 1936-ம் ஆண்டு மெர்சிடஸ் கார் முதல் அண்மையில் அறிமுகமான அனைத்து கார்களும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. அடுத்ததாக வீட்டுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் தங்கம் ஜொலிக்கிறது.
மின்சார சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்களும் 24 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. பிரம்மாண்ட வீட்டில் விசாலமான 10 படுக்கை அறைகள் உள்ளன. வீட்டின் பிரதான இடங்களில் தங்கத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மின்னுகின்றன. சில நாற்காலிகளும் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன.
யூ டியூபர் பிரியம் சரஸ்வத்திடம், வீட்டின் உரிமையாளர் கூறும்போது, “எங்கள் குடும்பத்தில் மொத்தம் 25 பேர் உள்ளோம். முதலில் ஒரு பெட்ரோல் நிலையத்தை நடத்தினோம். இதன்பிறகு அரசிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற்று சாலை, கட்டிடங்களை கட்டி கொடுத்தோம். தற்போது 300 அறைகள் கொண்ட பிரம்மாண்ட ஓட்டலை கட்டி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.
16 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago