Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு 18 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட நபர் ஒருவர் 27 வருடங்களின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கல் அந்தனி கிறீன் (44) என்பவர் 1983 ஆம் ஆண்டு யுவதியொருவரை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார்.
ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மரபணு (டி.என்.ஏ.) சோதனையொன்றின் மூலம் மைக்கல் கிறீன் நிரபராதி என கண்டறியப்பட்டது. அதையடுத்து நேற்றுமுன்தினம் அவர் டெக்ஸாஸ் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
தான் சிறையிலிருந்தபோது இறந்த தனது தாயின் புகைப்படத்தை தாங்கியவாறு அவர் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தார். கிறீனின் உறவினர்கள் பலர் அங்குகூடி நின்று அவரை வரவேற்றனர். அங்கு வந்திருந்த கிறீனின் மருமகன், மருமகள்களில் பலர் கிறீன் சிறைக்குச் சென்ற பின்னர் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையிலிருந்தபோது கிறீன் சட்டம் படித்தாராம். இனி என்ன செய்வதாக உத்தேசம் என செய்தியாளர்கள் கேட்டபோது "வாழ்க்கையை வாழப்போகிறேன்" என கிறீன் பதிலளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
41 minute ago
47 minute ago
2 hours ago