Super User / 2010 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்வானைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக எண்ணிக்கையான நுளம்புகளைப் பிடித்து 3,000 அமெரிக்க டொலர் பணப்பரிசை வென்றுள்ளார். இவர் ஒரே மாதத்தில் சுமார் 40 லட்சம் நுளம்புகளை பிடித்துள்ளார்.
தென் தாய்வான், யுன்லின் மாகாணத்தைச் சேர்ந்த ஹுவாங் யூ யென் என்பவரே நுளம்புப் பிடிக்கும் போட்டியொன்றில் இவ்வாறு அதிக நுளம்புகளை பிடித்துள்ளார். இப்போட்டியில் 72 போட்டியாளர்களை அவர் தோற்கடித்தார். அவர் பிடித்த நுளம்புகளின் மொத்த எடை 1..5 கிலோகிராம்களாகும்.
நுளம்புப் பிடிக்கும் கருவிகளைத் தயாரிக்கும் இம்பிகட்ஸ் இன்டர்நெஷனல் எனும் நிறுவனம் இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
அந்நிறுவனமானது ஹுவாங் யூ யென்னின் பெயரை கின்னஸ் உலக சாதனை நூலில் பதிவு செய்வதற்காக அனுப்பிவைத்துள்ளது.
தாய்வானில் நுளம்புகளால் பல நோய்கள் பரவி வந்தன. குறிப்பாக, 1965 ஆம் ஆண்டு வரை மலேரியா நோய் அங்கு பரவியிருந்தது. தற்போதும் டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் குறித்து மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கிறார்கள்.
18 minute ago
33 minute ago
1 hours ago
nnassm2010 Thursday, 05 August 2010 01:54 AM
இவரை கொண்டுவந்தால் இலங்கையில் டெங்கு இல்லாமல் போய் விடும்.
Reply : 0 0
Thamilan Thursday, 05 August 2010 09:06 PM
மேர்வின் சிலவா நல்ல சந்தோசபடுவார்
Reply : 0 0
xlntgson Thursday, 05 August 2010 09:37 PM
எந்த பெண்ணும் பிடிக்கலாம் கொசுக்களை, அந்த கருவி இருந்தால் அந்த கருவியை விற்கும் நிறுவனம் இந்த பரிசை வழங்கி இருக்கிறது. கொசுக்களை ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் மலடாக்க ஒரு முயற்சி விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சியுடன் நடைபெறுகிறதாம். வெற்றி பெற்றால் நலம். கொசு பிடிக்கும் கருவிகள் விற்கும் நிறுவனங்களை எல்லாம் நம்ப முடியாது. குறவர்கள் பன்றித்தொல்லைக்கு வாழைப்பழத்தில் வைக்கும் வெடி போன்றதுதான், ஒருநாளும் ஒழியாது, கூடிக்கொண்டு போகும், இல்லாவிட்டால் அவர்களுக்கு வியாபாரம் ஏது? மருந்து தெளிப்பான்களால் என்ன பலன்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago
1 hours ago