2025 மே 01, வியாழக்கிழமை

காலொடிந்த காதலனை கதறவிட்டு 30 பன்றிகளுடன் பறந்துபோன காதலி

Editorial   / 2023 ஏப்ரல் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால் ஒடிந்த காதலனை கலற்றிவிட்ட காதலி... சீனாவின் சீச்சுவான் (Sichuan) மாநிலத்தைச் சேர்ந்த சியோங் (Xiong) அவரது காதலர், லு (Lu) கால் முறிந்த நிலைமையில் அவரை விட்டுவிட்டு 30 பன்றிகளுடன் ஓடிப்போனார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் 11,600 டொலர் கடன் வாங்கிப் பன்றிப் பண்ணை ஒன்றைச் சேர்ந்து நடத்தியதாக SCMP செய்தி நிறுவனம் கூறியது. ஆனால் லு காலொடிந்து, படுக்கையில் கிடந்தபோது சியோங் அவரை மருத்துவமனையில் பார்க்கச் செல்லவில்லை. சியோங்கைத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியாமல் போன பிறகு ஏதோ சரியில்லை என்னும் எண்ணம் லுவின் மனத்தில் தோன்றியது. அதன் பிறகே சியோங் 11,500 டாலர் மதிப்பிலான 30 பன்றிகளுடன் ஓடிப்போனதாக SCMP செய்தி நிறுவனம் கூறியது. பன்றிகளுக்குப் பரிதவித்த லுவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சிய அவருக்குப் பண நெருக்கடியும் ஏற்பட்டது. ஓடிப்போன சியோங் திரும்பிவருவார் எனக் காத்துக்கொண்டிருந்தார். அவர் குறித்த பதிவுக்கு இணையவாசிகள் கருத்துகளைத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .