Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகிப்து நாட்டின் பிரமிடு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட, மண்டை ஓடு யாருடையது என்பதை, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது. பல நுாற்றாண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்க நாடான எகிப்தில், இறந்தவர் உடலைப் பதப்படுத்தி, நிலவறையில் வைத்து, கல்லறை கட்டும் வழக்கம் இருந்தது.
பதப்படுத்தப்பட்ட உடல், ‘மம்மி’ என்றும், கல்லறை, ‘பிரமிடு’ என்றும் அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், எகிப்து நாட்டில், பிரமிடு ஒன்றில் இருந்து, 4,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மண்டை ஓடு ஒன்று, 1915 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது யாருடையது என, தொல்லியல் நிபுணர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துவந்தனர்.
ஆனால், அதனை எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெகுநாகி என்ற கவர்னருக்கு சொந்தமான பிரமிடில் இருந்து, அந்த மண்டை ஓடு எடுக்கப்பட்டதால், அது அவரது மனைவி அல்லது குடும்பத்தினரின் மண்டை ஓடாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. இருப்பினும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான, எப்.பி.ஐ., அந்த மண்டை ஓட்டை வாங்கி, ஆராய்ச்சி செய்தது. அதில் இருந்த பல் ஒன்றை வைத்து, பல்வேறு கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வுக்கு, பல நவீன முறைகள் கையாளப்பட்டன.
முடிவில், இது, கவர்னர் “ஜெகுநாகியின் தலை” தான் என, எப்.பி.ஐ அறிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆராய்ச்சி மேலும் தொடரும் என்றும் கூறியுள்ளது.
17 minute ago
33 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
46 minute ago
57 minute ago