2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் கைதான மூவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கஞ்சாவுடன் கைதான செய்யப்பட்ட மூவரில் இருவருக்கு, அக்கறைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், மேலதிக நீதிமன்ற நீதவானுமாகிய நளினி கந்தசாமி, தலா பத்தாயிரம் ரூபாவும், மற்றையவருக்கு 7 ஆயிரத்து ஐநூறு ரூபாவினையும் அபராதமாக விதித்துள்ளார். 

நேற்று, திங்கட்கிழமை (18) நீதவான், முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர் மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.

அக்கரைப்பற்றுப் பொலிஸ் போதைப்பொருள் குற்றப்புலானாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க, நேற்று, ஞாயிற்றுக்கிழமை (17)  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 3.4,3.3, 2.3 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .