Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் 24 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் எகிப்தியப் பிரதமர் எஸாம் ஸராப் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் அஸ்வான் மாகாணத்திலுள்ள தேவாலயமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக கெய்ரோவில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேவாலயம் மீதான தாக்குதலை முஸ்லிம்களே மேற்கொண்டதாக அந்த நாட்டு கிறிஸ்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகுமென அவசரமாகக் கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
meenavan Tuesday, 11 October 2011 04:25 AM
இதனை காரணமாக வைத்து, அமெரிக்காவின் ஊடுருவல் நிகழ்ந்தாலும் தடுத்துவிட முடியாது.
Reply : 0 0
amnaheeb Tuesday, 18 October 2011 04:55 AM
இது அமெரிக்காவின் ஊடுருவல்தானோ யார் அறிவார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago