2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

’எமது பிரிவு நிரந்தரமில்லை’

ஆர்.மகேஸ்வரி   / 2020 மார்ச் 12 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரிவானது நிரந்தரமல்ல எனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஆனால் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டு வரும் உட்பூசல்கள், பிரிவுகள் நிரந்தரமானவை, இது ஏப்ரல் 25ஆம் திகதிக்குப் பின்னர் மேலும் பூதாகரமாக மாறலாம் என்றார்.

இன்று (12) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

வரலாற்று ரீதியில் மிகவும் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி,  இன்று இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளன. எனினும் குறித்த முகாம்களில் 98 சதவீதமானோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருப்பதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .