2021 ஜனவரி 23, சனிக்கிழமை

‘ஐ.தே.கவுக்கு 2 ஆவது தோல்வி’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்கள் இரண்டாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்துள்ளனரெனத் தெரிவித்த எதிரணியின் நாடானுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல, தார்மீக அரசியலை பின்பற்றி ஐ.தே.க எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று கருதுவதாகத் தெரிவித்தார்.

 கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் போன்று, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் ஐ.தே.க வின் ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். ஐ.தே.க வின் ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றதென மக்கள் நிரூபித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

அத்துடன், தார்மீக அரசியல் குறித்து பேசுகின்ற இத்தருணத்தில், ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் எதற்காக மக்கள் முன்னால் செல்ல வேண்டும் என்பது குறித்து அக்கட்சி சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .