2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரித்த நபருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை

Super User   / 2010 மே 15 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த நபருக்கு 6 சிறைத்தண்டனை வழங்கி அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று கனேடிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் சேர்ந்த 46 வயதுடைய பிரபாகரன் தம்பித்துரை என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக கனடாவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.  இந்நிலையிலேயே குறித்த நபருக்கு எதிராக கனடாவின் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--