Editorial / 2020 ஜனவரி 03 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு 7ஆம் திகதி , நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, செவ்வாய்க்கிழமை காலை 9 மணியிலிருந்து மறுநாள் காலை 9 மணிவரையான 24 மணிநேர நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டவை, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே, பாதுக்க ஆகிய பிரதேசங்களுக்கே இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென்றும் சபை தெரிவித்துள்ளது.
கலட்டுவாவயிலிருந்து மஹரகம வரையான நீர் விநியோகக் குழாயில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளதென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago