2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

யுவதி பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: 3 பொலிஸார் பணி இடைநிறுத்தம்

Editorial   / 2019 நவம்பர் 09 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்மாத்தகம பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.  

யுவதியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக கிடைப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமை காரணமாக குறித்த உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியடசர்கள் ருவான் குணசேகர, தெரிவித்தார்.

உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் ஆகியோரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த யுவதி, அவருடன் பயணித்த இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எம்மாத்தகம பொலிஸ் நிலையத்தில் குறித்த யுவதியின் தந்தை முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .