Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 மே 25 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட மீராகேணி ஸக்காத் கிராமத்தில் நேற்றுப் பகல் தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீராகேணி ஸக்காத் கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா தஸ்னிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
பெரிய வாளிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த நிலையில், அதில் இந்தக் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் குளித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, இந்தக் குழந்தை தண்ணீரினுள் அமிழ்ந்து மூச்சுத் திணறியுள்ளது.
குளித்து விளையாடிக்கொண்டிருந்த ஏனைய குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டார் ஓடிச் சென்று, தண்ணீரினுள் அமிழ்ந்து கிடந்த இந்தக் குழந்தையை மீட்டெடுத்து, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், அவ்வேளையில் குழந்தை உயிரிழந்து காணப்பட்டது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
22 Apr 2021
22 Apr 2021