2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

11 மாவட்டங்களில் வரட்சி

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் 11 மாவட்டங்களில் நிலவும் வரட்சியால், 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

61 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்கள், வரட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பயிர்ச்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல்,பொலன்னறுவை, அநுராதபுரம், அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது வரட்சி நிலவுகிறது.

குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு, பவுசர்கள் மூலம் குடிநீரைப் பெற்றுக் கொடுக்க, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .