2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இலங்கை தூதரகத்தை மூடுமாறு ஆர்ப்பாட்டம்; சென்னையில் வைகோ,நெடுமாறன் கைது

Menaka Mookandi   / 2010 ஜூலை 14 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் சென்னை நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், வைகோ உட்பட பலர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கைத் தமிழர்களில் பலர் தொடர்ந்தும் முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான இலங்கை அரசின் போக்கு மற்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, இலங்கை அரசுக்கு தமிழக மக்களின் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக மேற்படி செய்திகள் கூறுகின்றன. 

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உட்பட பலர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இலங்கை தூதரகத்தை சென்றடைந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை மூடுவதற்கு முற்பட்ட நிலையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்று அந்த செய்திகள் மேலும் கூறின.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--