Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கைகயானது, 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையை எந்த நாட்டுக்கு வழங்குவது என்ற விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக் ஹூப்பர் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின்போது அப்பாவி மக்கள் மீது இலங்கைப் படையினர் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாருக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் குழு அனுப்பிய மனுவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என சிலர் கோரியுள்ளனர்.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்தும் உரிமையை இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கா அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரத்திற்கா வழங்குவது என்பதை நவம்பர் 11 ஆம் திகதி பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனம் தீர்மானிக்கவுள்ளது. இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் 71 நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான வாக்கெடுப்பின் மூலம் இது தீர்மானிக்கப்படும்.
இந்நிலையில் பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை, 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமை தொடர்பான தீர்மானித்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என மைக் ஹுப்பர் தெரிவித்துள்ளார். அது பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் கரிசனைக்குரிய விடயமல்ல என அவர் கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
19 Oct 2025