2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சிறுநீரக மோசடி; 21பேரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்;காக  இளைஞர்கள் 21 பேரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரு என்ற இளைஞனுடன் சிறுநீரக விற்பனை தொடர்பில் மின்னஞ்சலில் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த மூன்று பேரும் ஹைதராபாத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரு என்ற இளைஞனை இலங்கைக்கு தொழில்வாய்ப்புக்காக அழைத்துசென்று அங்குவைத்து அவரது சிறுநீகரத்தை அகற்றும் போது அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X