Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 02 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புளையில் அமைந்துள்ள குகை விகாரையானது, வரலாற்று சிறப்பு மிக்கதென, யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்.
“தம்பா” எனப்படுவது பாறை எனவும் “உள்ள” எனப்படுவது நீருற்று எனவும் வழங்கப்படுகிறது. இங்கு இயற்கையாகவே, நீர்த் துளிகள் நிரம்பி, நீர் வெளியில் வழியாத வண்ணம் அமையப்பெற்றுள்ள, அதிசய நிகழ்வு காணப்படுகிறது. இதனை காண்பதற்காகவே ஏராளமான மக்கள் இவ்விடத்துக்கு வருகை தருவது வழமையாகும்.
இக்குகையில் மேல் நோக்கி பாறை முழுவதும் உள்ள ஓவியங்களை பார்க்கும் பொழுது, புத்த பகவானின் ஓவியங்கள் மிகவும் கண்களை கவரும் வண்ணம் இருப்பது சிறப்புக்குரியது என்பதுடன், அக்கால ஓவிய திறன்களை பறைசாட்டுவனவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றுமொரு சிறப்பம்சம் யாதெனில், இங்கு காணப்படும் பௌத்த அருங்காட்சியகமாகும். இதன் நுழைவாயிலில் நுழையும் பொழுது சிங்கமொன்றின் தாடைகள் விரிக்கப்பட்டு, வாய் வழியே நுழைவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளமை அற்புதமான அனுபவத்தை தருகின்றது.
6 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago