J.A. George / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 03 கொரோனா மரணங்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (07) உறுதிப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 591 ஆக அதிகரித்துள்ளன.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (06) உயிரிழந்துள்ளார்.
தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (06) மரணமடைந்துள்ளார்.
ஹெட்டிபொலை பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதனை, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
46 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago