2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

J.A. George   / 2021 மார்ச் 09 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது உறவினருக்காக கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண  தரப்பரீட்சைக்கு தோற்றிய 21 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் கலுவில பகுதியில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்தவர். அவரை நீதிமன்றில் இன்று(09) முற்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சாதாரண  தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X