Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 19 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது பலர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக கரிசனைக் கொண்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதெனத் தெரிவித்துள்ள கஃபே அமைப்பு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று (19) அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே, மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் ரீதியான சாதகமான பெறுபேற்றை அடைந்துகொள்ளும் வகையில், அதற்கேற்றவாறான தேர்தல்களை முதலில் நடத்திப்பார்ப்பது அரசியல் கலாசாரமாக காணப்படுகின்றது. கடந்த அரசாங்கமும் இந்த நடைமுறையை பின்பற்றியிருந்தமை வெளிப்படையான உண்மை.
ஆனாலும், தற்போது மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே மாகாண சபைகள் காணப்படுகின்றன. மேலும், மாகாண சபை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை ஒரு ஜனநாயக செயன்முறையாக கருத முடியாது. எனவே, மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமான செயற்பாடாகும்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, "காணாமல் போன மாகாண சபைத் தேர்தலை" நடத்த வேண்டிய அவசியம் என்பதை வலியுறுத்தினார். இதற்கு முன்னரான அரசாங்கங்கள், தங்களுக்கு ஏற்ற வகையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தியதோடு காலத்தையும் பணத்தையும் வீணடித்ததை நாம் அவதானித்தோம். எனவே, இது தொடர்பாக துரிதமாக ஆராய்ந்து மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
8 hours ago
19 Oct 2025
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
19 Oct 2025
19 Oct 2025