Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையேயான பிறீமியர் லீக் தொடரில், நியூகாசில் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி சமநிலையில் முடித்துக் கொண்டது.
மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ரஹீம் ஸ்டேர்லிங், கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நியூகாசில் யுனைட்டெட் சார்பாக, ஜெட்ரோ வில்லியம்ஸ், ஜொன்ஜோ ஷெல்வி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்திருந்தது. வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஆரோன் கிறஸ்வெல் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வேர்ஜில் வான் டிஜிக் பெற்றிருந்தார். பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் டங்க் பெற்றிருந்தார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, டெலே அலி இரண்டு கோல்களையும், மூஸா சிஸாகோ ஒரு கோலையும் பெற்றனர். போர்ண்மெத் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஹரி வில்சன் பெற்றிருந்தார்.
5 minute ago
15 minute ago
38 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
38 minute ago
42 minute ago