Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 24 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
ஆதிகாலத்தில் சமுதாயத்தின் மையமாக கொண்டு ஆலங்கள்தான் இருந்துவந்துள்ளன. ஆலயத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்வர்களாக அன்றை மனிதர்கள் வாழ்ந்து இருக்கின்றனர். ஆனால், இன்று இந்நிலை மாறி ஆலயத்தினை மதிக்கின்ற தன்மையும் குறைந்துவருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் “வாழும்போதே வாழ்த்துவோம்” எனும்தொனிப் பொருளில் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு ஆலயத் தலைவர் ஆசிரியர் விஜயகுமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
“அன்று ஆலயமானது நீதிமன்றமாகவும் கல்விக்கூடமாகவும் குற்றம் புரிபவர்களை தண்டிக்கும் இடமாகவும் கலைகளை வளர்க்கின்ற ஸ்தலமாகவும் ஆலயம் விளங்கியிருக்கின்றது. அந்த நிலை இன்று மாறிச்சென்றுகொண்டிருக்கின்றமை இந்து மதத்துக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்.
ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கௌரவிக்கப்படுவது காலத்தின் தேவையாகும். ஏனெனில், ஓர் ஆலயத்தை அமைப்பதற்காக தர்மகர்த்தாக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். அந்த நல்ல சேவையினை ஆற்றிய இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நல்லசெயலைதுறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயம் மேற்கொண்டு இருப்பது பாராட்டுக்குரியது.
இன்றைய காலக் கட்டத்தில் ஆலயங்கள் பக்திபரவசம் ஊட்டும் இடமாக இருக்கும் வேளையில், சில ஆலயங்களில் பக்திப்பரவசமூட்டுப் பக்திப்பாடல்களை ஒலிபரப்பாது சினிமாப்பாடல்களை ஒலிபரப்பும் துர்ப்பாக்கிய நிலை எமது சமயத்தில் இடம்ற்றுக்கொண்டு இருப்பது மாறவேண்டும் என்றார்.
8 minute ago
25 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
2 hours ago
5 hours ago