Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 18 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
1882ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்துக்கு ஒன்றுகூடல் மண்டபம் இல்லாதிருப்பது பாரிய குறையாக உள்ளது என அவ்வித்தியாலயத்தின் பிரதி அதிபர் என்.இராஜதுரை, இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
க.பொ.த. உயர்தரத்தைக் கொண்ட 1 ஏபி பாடசாலையாக இருக்கும் இவ்வித்தியாலயத்தில் தற்போது 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.
மேலும், இவ்வித்தியாலயக் கட்டடங்கள் சுமார் 60 வருடங்களுக்கு மேல் பழமையானவை.
இவ்வித்தியாலயத்தில்; மாணவர் ஒன்றுகூடல் மண்டபம் இல்லாதிருப்பதன் காரணமாக மாணவர்களின் வகுப்புகளை காலி செய்துவிட்டு, கல்வி சார்ந்த நிகழ்வுகளை நடத்த வேண்டியுள்ளது. அல்லது வித்தியாலயத்தின் வளாகத்தில் நடத்த வேண்டியுள்ளது.
இது இவ்வாறிருக்க, இவ்வித்தியாலயத்தில் போதிய வகுப்பறைகளும் தளபாட வசதிகளும் இல்லாதிருப்பதாலும், மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் எனவும் அவர் கூறினார்.
ஆகவே, இவ்வித்தியாலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆர்வலர்களும் முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
14 minute ago
33 minute ago