A.P.Mathan / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
முறைசாராக் கல்வி என்பது பாடசாலையில் இருந்து இடைவிலகியவர்களை மீண்டும் பாடசாலையில் இணைப்பதாகவும் இளைஞர் யுவதிகளுக்கு தமது வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துவதற்குமான ஊன்றுகோலாக அமைதல் வேண்டும் என கிழக்கு மாகாண முறைசாராக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் நாகராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர், முறைசாராக் கல்வியினைக் கற்றவர்கள் வெறுமனே படித்து சான்றிதழ் பெற்றுவிட்டோம் என இருந்து விடக்கூடாது. கற்ற தொழிலை வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதுடன் உங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கும் இவ்வாறு வாழ்க்கைக்கு உதவக்கூடிய விடயத்தினைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
எமது நாட்டில் படித்துவிட்டு, பட்டம் பெற்றுவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் நிலைமை அதிகரித்திருக்கிறது. அவ்வாறானவர்களுக்கும் தொழில் ஒன்று கிடைக்கும் வரைக்குமான காலத்தில் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தக்கூடிய வாய்ப்பை இந்த முறைசாராக் கல்வி தருகிறது.
அதனால் தான் இந்தப் பயிற்சிநெறியினை வருமானத்தைப் பெறுவதற்கான பயிற்சி நெறி என்று அழைக்கிறோம் என்றார்.
இக் கண்காட்சி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி, கலாசார, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எச்.கே.யு.கே.வீரவர்த்தன, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இ.போல் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் முறைசாராக் கல்வித்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று பயிற்சி பெற்றவர்களின் கைவினைப் பொருள்களான ஆடைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், கேக் மற்றும் வீட்டு அலங்காரப் பொருள்கள் என் பெருந்தொகையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026