2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஆறுமுகத்தான் குடியிருப்பில் விபத்து இருவர் காயம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இருவர் காயப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் நடை பெற்றுள்ளது.மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் ஆறுமுகத்தான் குடியிருப்புச் சந்தியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் துவிச் சக்கர வண்டி ஒன்றில் சென்ற மீன் வியாபாரி ஒருவர் மீது மோதுண்டதால் இருவரும் காயப்பட்டு ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .