Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 29 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நித ஒதுக்கீட்டின் மூலம் திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வாழைத்தோட்ட விவசாய மக்களின் நன்மை கருதி விவசாயக் கிணறு மற்றும் நீர் இறைக்கும் பம்பிகள் முதலமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் வருகின்ற கிராமிய அபிவிருத்தி எனும் செயற்றிட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இவை வழங்கப்பட்டன.
இதன்போது, சுமார் 8 விவசாயக் கிணறுகளும், 22 நீர் இறைக்கும் பம்பிகளும், முட்கம்பி, பழக்கன்றுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 விவசாயிகள் மேற்படி விவசாய உபகரணங்களையும் உள்ளீடுகளையும் பெற்றுக கொண்டார்கள்.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெருகல் பிரதேச சபை உறுப்பினர் திருமதி எஸ்.சாந்தமலர், மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், முதலமைச்சர் செயலக திட்டமிடல் பணிப்பாளர், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
36 minute ago
40 minute ago
1 hours ago