2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

திருமலை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சங்கம் உதயம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஒன்றிணைந்ததான சங்கம் ஒன்று இன்று (06) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பட்டதாரிகள் நிமனத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக நியமனம் பெற்றுள்ள சுமார் 400இற்கு மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக நியமனம் பெற்றுள்ளவர்கள் நாட்டின் ஒட்டு மொத்த அபிவிருத்திக்கு எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்பது பற்றி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே விளக்கமளித்தார்.

நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி அஜித் ஜெயசுந்தர உட்பட இன்னும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .