2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி நகரசபைத் தலைவர் கொரியா பயணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொரியாவில்  எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள கால நிலை மாற்றம்  தொடர்பான மாநாட்டில் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கலந்து கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினூடாக (யு.என்.டி.பி.) இதில் கலந்து கொள்ளவுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவைர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

இந்த மாநாடு 27.4.2014ஆம் திகதி ஆரம்பமாகி 01.05.2014ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்த மாநாட்டில் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் நகர சபை உத்தியோகத்தர் எம்.சாகீர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.இதற்காக இவர்கள் 26ஆம் திகதி கொரியாவுக்கு பயணமாகவுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--