2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

தமிழ் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

2007ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தேசிய தமிழ் தின போட்டியில் தேசியமட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை (26) மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் தலைமையிலும்; நடைபெறவுள்ள விழாவில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா, தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--