Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அராபிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொதிகளில் இலங்கையின் அதிசிறந்த தேயிலை எனக் குறிப்பிடப்பட்ட சுமார் ஏழாயிரம் கிலோகிராம் கழிவுத் தேயிலையை கடுகண்ணாவைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
இதன் பெறுமதி பன்னிரண்டரை இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, வெலம்பொடை, தவுலகலைப் பிரதேசத்தில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லவிருந்த நிலையிலேயே இக்கழிவு தேயிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
10 கிலோகிராம் கொண்ட பெட்டிகளில் கையடக்கமாகப் பொதி செய்யப்பட்டு அவற்றுக்கு பிளாஸ்டிக் ஸ்டிகர்கள் மூலம் சீல் வைக்கப்பட்டுமிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், பொதிசெய்யப்பட்ட பிளாஸ்டிக் ஸ்டிகர்களில் அராபிய எழுத்துக்களில் கவர்ச்சியாக எழுதப்பட்டிருந்தாக தெரிவித்த பொலிஸார், இவை அரபு நாடு ஒன்றுக்கு ஏற்றுமதிக்காக கொண்டு செல்ல பொதி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
54 minute ago
59 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago
5 hours ago