2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

25 வீதிகளை புனரமைக்க திட்டம்: ராஜாராம்

Sudharshini   / 2015 நவம்பர் 16 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

பெருந்தோட்ட பகுதிகளில் 25 வீதிகளை புனரமைப்பதற்கான திட்டமொன்றை முன்மொழிந்துள்ளதாகவும் 2016 இற்கான வரவு-செலவு திட்டத்தின் பின், குறித்த வீதிகள் புனரமைக்கப்படுமெனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.

மதுரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெமுல்லயிலிருந்து கபரகலைக்கு செல்லும் பாதை கடந்த 50 வருடங்களாக செப்பனிடப்படவில்லை என பிரதேச மக்கள்  தெரிவித்தனர்.  8 கிலோ மீற்றர் தூரமுடைய இவ்வீதி 1 கிலோ மீற்றர் வரை மட்டுமே புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள பகுதி மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

குறித்த,  7 கிலோ மீற்றர் தூரமுடைய பாதையை செப்பனிட்டு தருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் வாக்குறுதி வழங்கிய போதிலும் அதுவும் இதுவரை நடைபெறவில்லையென பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை கூறினார்.

'குறித்த பாதை புனரமைப்பு தொடர்பில் கடந்த அரசாங்கத்திடம் தெரிவித்து அதற்கான அனுமதி பெறப்பட்டது.  ஆனால், துரதிஷ்டவசமாக  நாட்டில்  ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக  கபரகலை பாதையை செப்பனிட முடியாது போனது' என்றார்.

   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X