Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி - மாத்தளை வீதியில் அக்குறணை நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்ற வீதி விபத்தொன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் 15 வயதான பாடசாலை மாணவன் பொஹமட் ஸஹ்ரான் என்பவராவார். இவர் அக்குறணை பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்பவர் ஆவார்.
அக்குறணை மாத்தளை வீதியில் இவ்விருவரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த பஸ் ஒன்றில் மோதியுள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது அக்குறணை ஸியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கடும் காயத்துக்குள்ளாகியுள்ள இளைஞர் கண்டி போதனா வைத்திய சாலையில் தீவிர சிகிச'சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இம்மரணம் சம்பந்தமாக மரண விசாரணை இன்று மாலை நடைபெறவுள்ளது. மேலதிக விசாரனைகள் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
Thilak Saturday, 02 October 2010 07:24 PM
15 வயதில் இவர் மோட்டார் சைக்கிளோட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார்? அனுமதி வழங்கியது யார்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
14 Jul 2025
14 Jul 2025