Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
விளையாட்டு மூலம் ஒழுங்கு, கட்டுப்பாடு, திட்டமிடல், தலைமைத்துவப் பண்புகள் போன்றன ஏற்படுகின்றன. அதேபோல் 'தூய்மையும் பசுமையும்' என்ற செயற்பாட்டை முன்னெடுப்பது மூலம் விளையாட்டு இலகுவான மார்க்கமாக அமையும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தெரிவித்தார்.
கண்டி மகளிர் உயர் கல்லூரியில் நேற்று மாலை இடம்பெற்ற வர்ண இரவு பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
'தூய்மையும் பசுமையும்' என்ற புதிய செயற்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சு அமுல்படுத்தவுள்ளது. இன்று சுற்றாடலும் தூய்மையும் முக்கியத்துவம் பெறும் அதேவேளை விளையாட்டு மூலம் ஒழுங்கு, கட்டுப்பாடு, திட்டமிடல், தலைமைத்துவப் பண்புகள் போன்றன ஏற்படுகின்றன. எனவே 'தூய்மையும் பசுமையும்' என்ற செயற்பாட்டை முன்னெடுக்க விளையாட்டு இலகுவான மார்க்கமாகும். அதனடிப்படையில் எதிர்காலத்தில் எமது அமைச்சு மூலம் இத்திட்டம் அமுல்படுத்தப் படவுள்ளது என்றார்.
விளையாட்டுத்துறைக்கு பயிற்றுவிப்பாளர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். எனவே எதிர்காலத்தில் விளையாட்டுத்துறைப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் முக்கியத்துவமளிப்பதன் மூலம் எமது விளையாட்டுத்துறையை மேலும் உயர்த்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .