Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 14 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு ஒக்டோபர் 30 ஆம் திகதி கையெழுத்திடச் சென்றபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மாளிகாவத்தையை சேர்ந்த மொஹமட் சதாக் மொஹமட் பாஹிம் எனும் இந்த இளைஞரின் மரணம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதவான் லங்கா ஜயரட்ன, குற்றச்செயல் இடம்பெற்றிருக்கலாம் என நியாயமான சந்தேகம் உள்ளதெனத் தெரிவித்ததுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேற்டி இளைஞர் போதைப் பொருள் பணியகத்தில் நீர் அருந்தியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போதைப் பொருள் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார் என கோட்டை பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தனர்.
எனினும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, உயரிழந்த இளைஞரின் வயிற்றிலோ உணவுக்குழாயிலோ போதியளவு உணவோ நீரோ காணப்படவில்லை எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நீதவான் எனவே சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையுடன் பொலிஸ் அறிக்கை முரண்படுவதாக சுட்டிக்காட்டினார்.
உயிரிழந்த இளைஞரின் உடலில் காணப்பட்ட காயங்கள் தொடர்பாக போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் சமர்பித்த அறிக்கையும் சட்ட வைத்திய அறிக்கையுடன் முரண்படுவதாகவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.
உயிரிழந்த இளைஞனின் மனைவியான பாத்திமா ரிஸானா சாட்சியமளிக்கையில், தனத கணவருக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கும் இடையில் பிரச்சினையொன்று இருந்ததாகவும் தனது கணவரின் திடீர் மரணத்திற்கு இதுவே காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
43 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago
chelvin Tuesday, 15 November 2011 01:30 AM
இப்ப மறைமுகமான நடவடிக்கை. எல்லாம் மர்மம் . என்ன நடக்குது என்று யாருக்குத் தெரியும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago