2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஆங்கில பாட பரீட்சை மீள நடைபெறவுள்ளது

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடமாகாண கல்வித் திணைக்களத்தால், தரம் 10 மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆண்டிறுதிப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சை வெளியாகியமையால், அப்பரீட்சை மீள நடைபெறவுள்ளது.

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 11, தரம் 10, தரம் 9 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆண்டிறுதிப் பரீட்சை நடத்தப்பட்டு வருகின்றது.

இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தரம் 10 மாணவர்களுக்கான ஆங்கில பாட பரீட்சை வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாகவே தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஊடாக வவுனியாவில் வெளியாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த பரீட்சையானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீள நடைபெறும் என, வடமாகாண கல்வித் திணைக்கள் வலயக்கல்விப் பணிமனை ஊடாக பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த வினாத்தாள் வெளியாகியமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .