2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

காதலர்களின் ஓய்வுகூடமாக மாறும் ‘மந்திரிமனை’

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - சங்கிலியன் மந்திரிமனை எவ்வித பராமரிப்பும் கண்காணிப்புமின்றி, காதலர்களின் ஓய்வுகூடமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

இரண்டாம் சங்கிலியன், யாழ்ப்பாணத்தின் அடையாளமாக வராலாற்று பதிவுகள் கூறுகின்ற நிலையில், அதற்கான அடையாளச் சின்னங்களாக யாழ்ப்பாணம் - முத்திரைச் சந்தியில் சங்கிலியன் சிலை, அதன் அருகில் யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை என்பன காணப்படுகின்றன. 

இதில், மந்திரிமனை தவிர்த்த ஏனைய சின்னங்கள் தொல்பொருள் திணைக்களத்தாலும் யாழ்ப்பாணம் மாநகர சபையாலும் அடையாளப்படுத்தப்பட்டு, பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மந்திரிமனை எந்தவோர் அடையாளப்படுத்தலும் பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. 

ஏற்கெனவே, தொல்பொருள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று நிறுவப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்பெயர்ப் பலகை வர்ணப்பூச்சால் பூசப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. 

தற்போது பராமரிப்பின்றி காணப்படும் மந்திரிமனைக்குள், காதலர்கள் ஒன்று கூடுவதும் தமது பெயர்களைச் சுவர்களில் கிறுக்குவதுமாகக் காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .