Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 20 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம், மல்லாகத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
தெல்லிப்பளை பொலிஸாரும் வலிவடக்கு பிரதேசசபை வலிவடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய இந்த நடமாடும் சேவை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மல்லாகம் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் காமினி நவரத்தின பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நடமாடும் சேவையை ஆரம்பித்தும் வைத்தார்.
வலிவடக்கு பிரதேச செயலாளா எஸ்.முரளிதரன், வலிவடக்கு பிரதேசசபை செயலாளர், பாடசாலைகளின் அதிபர்கள், கிராம அலுவலர்கள், பிரதேச செயலக பிரதேசசபை ஊழியர்கள் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகளும் நடமாடும் சேவையில் கலந்து கொண்டனர்.
கண் பரிசோதனை, நீரழிவுப் பரிசோதனை உட்பட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், பொலிஸ் முறைப்பாடுகள் போன்ற பல சேவைகள் வழங்கப்பட்டன.
23 minute ago
35 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
1 hours ago
3 hours ago