Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
"ஜெய்க்கா" நிறுவனத்தின் நிதியுதவியுடன் யாழ்.குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் உள்ள இறங்குதுறைகள் புனரமைக்கப்படவுள்ளன. அத்துடன் நன்னீர் வளத்தை மேம்படுத்தும் நோக்குடன் குடாநாட்டிலுள்ள 8 குளங்களை சீராக்கவும் அந்நிறுவனம் நிதியினை வழங்கவுள்ளது.
இத்தகவலை யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தித் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் தர்மலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதி மீனவர்களின் நன்மை கருதி இறங்குதுறைகள் பலவற்றை புனரமைப்புச் செய்ய ஜெய்க்கா தன்னார்வத் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் முதற் கட்டமாக 20 மில்லியன் ரூபா செலவில் நாவந்துறை, காக்கைதீவுப் பகுதிகளில் உள்ள இறங்கு துறைகள் ஆழமாக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.
இதுதவிர 15 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணத்திலுள்ள 8 குளங்களும் இந்நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் சீரமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
25 minute ago
7 hours ago
9 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago
9 hours ago
19 Oct 2025