2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தந்தையை கட்டிப் போட்டு விட்டு 15 வயது மகள் மீது வல்லுறவு

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

சிலாபம் பகுதி வீடொன்றினுள் இரவு நேரம் அத்துமீறிப் பிரவேசித்த இருவர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கட்டிப் போட்டு விட்டு அவ்வீட்டிலிருந்த 15 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச் செயலுடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட திருமணமானவர்கள் என்றும், குறித்த சிறுமியின் தந்தை மீது இருந்த குரோதத்திற்கு பலி தீர்க்கும் வகையிலே இக்குற்றத்தை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பாலியல் வல்லுறவுக்குட்பட்ட சிறுமியும், அச்சிறுமியின் தந்தையும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சம்பவ தினம் இரவு வேளையில் அவர்களது வீட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசித்துள்ள இரு சந்தேகநபர்களும் சிறுமியின் தந்தையை அவர் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலிலேயே வைத்து கயிற்றினால் கட்டிப் போட்டுவிட்டு சிறுமியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியில் சென்று இருவரும் இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

 • Niththi Wednesday, 13 October 2010 05:56 PM

  இதற்கெல்லாம் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  Reply : 0       0

  xlntgson Wednesday, 13 October 2010 09:19 PM

  நித்தி, இதைப்பற்றி நான் பலமுறை கருத்து தெரிவித்து விட்டேன். "கசைஅடி கூட இல்லாத நாட்டில் மரண தண்டனையைப்பற்றி சிந்திக்கவும் இயலாது". கூறியது கூறல் என்னும் தவறுக்கு ஆளாக நேரிடும் என்று மேலும் விபரிக்காது விடுகின்றேன். யாருக்கும் தேடுதலில் பார்க்க இயலும். என்னை கிளிப்பிள்ளை என்றும் முனகுகின்றவன் என்றும் வாசிப்பு என்றும் அழைக்காதிருக்கவே இதை வலியுறுத்துகின்றேன். கருத்து சொல்ல விரும்புகின்றவர்கள் எல்லாம் கருத்து சொல்லாமல் விடவேண்டும் என்பவர்கள் அவ்வாறு கூறியே வாய் அடைக்க எண்ணுவர், மற்றவர் கருத்துகளை!

  Reply : 0       0

  Niththi Wednesday, 13 October 2010 09:33 PM

  xlntgson, தமிழ் மிரரில் உங்கள் கருத்துக்களை அடிக்கடி வாசிப்பவன் நான் . எனது கருத்துக்கு பதிலளித்தமைக்கு நன்றி. ஆனால் கசையடி இல்லாத நாடுகள் பலவற்றில் மரணதண்டனை உண்டு என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

  Reply : 0       0

  xlntgson Thursday, 14 October 2010 10:14 PM

  நன்றி நித்தி, ஆனால் சிந்தித்து பாருங்கள்! கசைஅடி கொடுத்தால் அப்புராணியாக மனிதன் இருந்து அரசியல் & அதிகார செல்வாக்கில் பொய்யான முறையில் தண்டனை பெற்றால் அவன் சபித்து விட்டு இறைவன் மீது பழியை போட்டு இருந்துவிடுவான். ஆனால் திட்டமிட்டமுறையில் பொய்க்குற்றச்சாட்டொன்றின் பேரில் மனிதன் கொல்லப்பட்டுவிடுவானே. ஆனால் இறைவன் வந்து மீட்பானா? அவ்வாறாக இறந்தவர்கள் சுவர்க்கம் புகுவார்கள் என்பது வேறு விடயம்! முந்திக்காலத்தில் கொலைப் பாவத்துக்கு அஞ்சி நாடு கடத்தினார்கள், இப்போது எங்கே நாடு கடத்துவது, எந்த நாட்டுக்கு?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .