2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

எரியூட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஜூட் சமந்த, அசார் தீன்

புத்தளம்- தம்பபண்ணி பகுதியில், கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின்  சடலத்தை, புத்தளம் பொலிஸார் இன்று (11) மீட்டுள்ளனர்.

புத்தளம் தம்பபண்ணி தண்டவாள பாலத்துக்குக் கீழ்,  எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி மக்கள்,  புத்தளம் பொலிஸாருக்கு தகவல்  வழங்கியுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

வேறு இடத்தில் வைத்து கொலைசெய்து, சடலத்தை  இங்கு எடுத்துவந்து எரியூட்டியிருக்கலாமென, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 மீட்கப்பட்ட சடலம்  இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .