Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி௧ வவுனியா மாவட்ட கிளையினர் நேற்று மாவட்ட ஆளுநரின் வவுனியா விஜயத்தின் போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி வறுமைகோட்டின் கீழ் வசிக்கும் நான்கு மாணவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.
வியாழன் இரவு றோயல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட ஆளுநர் ஜெயவத்சலன் லயன்ஸ் கழகங்களின் 6ஆவது வருடாந்த சம்மேளன மகாநாடு அடுத்த வருடம் மே மாதத்தில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன் கழகஅங்கத்துவத்தை வளர்த்தல், நீரழிவு பற்றி விழிப்புணர்வு, லியோ கழக உறவுகளை முன்னெடுத்தல், தலைமைத்துவ அபிவிருத்தி, பார்வை அற்றவர்களுக்கு உதவுதல் அதனை பாதுகாத்தல் போன்ற ஐந்து அம்ச திட்டத்தனை தாம் முன்வைத்துள்ளதாக கூறினார் இந்த நிகழ்வில் ஐவர் லயன்ஸ்கழகத்தில் இணைந்து சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.
கடந்த 16 வருடகாலம் வவுனியா லயன்ஸ் கழகம் பாரிய சமூக பணிகளை மேற்கொண்டு விருதுகளையும் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago