2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஒலிபெருக்கியில் பிரசாரம் சந்தேகநபர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பொலிஸாரின் அனுமதியின்றி, சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்த மூவரையும் 25,000 ரூபாய் பெறுமதியான பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்கிழமை (11) அனுமதியளித்தார்.

மேலும் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி ஒத்தி வைத்தார்.

திங்கட்கிழமை (10) சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் மந்துவில், கச்சாய், பகுதிகளை சேர்ந்த மூவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .