Princiya Dixci / 2016 மார்ச் 23 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலர், எல்லாமே தனக்குத் தெரியும் எனச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், உள் மனம் சொல்லும், 'அட... உனக்கு ஒன்றுமே தெரியாதடா' எனும் உண்மையினைச் சொல்லிக் குத்தும்.
ஆனால் எல்லோருக்குமே, ஏதாவது நல்ல விடயம் அல்லது எங்காவது அறிந்த விடயங்கள் தெரியாமற் போகாது. மனிதன் பிறக்கும் போதே தன்னைக் காப்பாற்றத் தெரியாமல் இருப்பதில்லை. குழந்தை, தாயிடம் பாலை அழுது மிரட்டிக் கேட்கின்றதே.
அறியவேண்டியதைக் கூசாமல் கேட்கவேண்டும். தெரியாததைத் தெரிந்தது போல் காட்டுவதே அறியாமையின் உச்சமாகும்.
அறிவு பெறுவதால், மூளை வெளிச்சம் பெறுகிறது, அறியாமை வந்தால் கூச்சமும் அச்சமும் புறப்பட ஆரம்பிக்கிறது. உங்களுக்குத் தெரிந்த நல்ல விடயங்களைச் சொல்லி மகிழுங்கள். அவ்வண்ணமே பிறரிடமும் கேட்டும் அறிய விளையுங்கள்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago